"இப்படி படையெடுத்து வந்துகிட்டே இருந்தா எங்க போறது?".. ஒரே வீட்டுக்குள் 120க்கும் மேற்பட்ட 'பாம்புகள்'!.. உறையவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 21, 2020 08:04 PM

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பு படையையே கண்டால் என்ன ஆகும்?

above 100 baby snakes coming out continuously in a mans house

மத்திய பிரதேச மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஜீவன் சிங் குஷ்வாவின் வீட்டில் கடந்த வாரம் சில குட்டிப் பாம்புகள் தென்பட்ட நிலையில், அதிர்ந்து போன அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் பாம்புகளை வெளியேற்றினார்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவரது வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் பாம்புகள் சாரை சாரையாக படையெடுக்கத் தொடங்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஒருவாரத்தில் சுமார் 123 விஷப்பாம்புகள் அவரது வீட்டிற்குள் எங்கிருந்தோ தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்துள்ளன. இதனைக் கண்டு அச்சத்தில் உறைந்த ஜீவன் சிங்,  “வீட்டுக்குள் பாம்பு.. வெளியே சென்றால் கொரோனா... தூங்கவே முடியவில்லை. நான் எங்க போறது?” என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஜீவன் சிங்கின் வீட்டில் ஏதோ ஒரு பகுதியில் பாம்பு முட்டை போட்டிருக்க வேண்டும் என்றும் அதில் இருந்து குட்டிப் பாம்புகள் நூற்றுக்கணக்கில் வெளியேறுவதாகவும் சந்தேகித்த வனத்துறையினர், ஜீவன் சிங்கின் வீட்டில் குட்டிப் போடும் பாம்பினையும் இதர பாம்புகளையும் தீவிரமாகத்தேடி வருகின்றனர். இந்நிலையில் பாம்புகளின் இந்தத் தொடர் படையெடுப்பை அக்கிராம மக்கள் கெட்ட சகுனமாகக் கருதுவதால், மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Tags : #SNAKE #VIRAL