VIDEO: "தெரியும்ல.. நாங்கலாம் யாருக்கும் வளைஞ்சு கொடுத்து போனது இல்ல!".. வைரல் ஆகும் பாம்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்கிறோம்.
எனினும் பறவைகள் என்றால் பறக்க வேண்டும், குதிரைகள் என்றால் வேகமாக பாய்ந்தோட வேண்டும் என்பதெல்லாம் எந்த அளவுக்கு இயற்கையின் நியதியாக இருக்கிறதோ அப்படி ஒன்றுதான் பாம்புகள் என்றால் நெளிந்து வளைந்து செல்லும் என்பதும் இயற்கை.
ஆனால் இயற்கைக்கு மாறாக, பாம்பு ஒன்று வளையாமல், நெளியாமல், உடலையே காலாக பயன்படுத்தி, நேராக ஒரே நேர்கோட்டில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பல்லாயிரக்கணக்காணோர் இணையத்தில் பார்த்துள்ளனர். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை கொடுத்தும் வருகின்றனர். அதில் ஒருவர், “இதான் பா.. எனக்கு சௌகரியமா இருக்கு” என்று கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் பக்கவாட்டு தசைகளை அசைத்து, அதன் உதவிகொண்டு
A non slithering snake pic.twitter.com/tBvJR87DUC
— Nature is Metal (@NaturelsMetal) May 14, 2020
முன்னேறும் பாம்பின் இந்த தன்மை கம்பளிப் பூச்சியின் தன்மையுடன் ஒத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.