“டேக்-ஆஃப் ஆகும்போதே, சக்கரம் கழண்டு விழுது.. 2020க்கு ஓப்பனிங்!”.. “விமான பயணி எடுத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 09, 2020 04:42 PM

விமானம் ஒன்று கிளம்பும்போது அதன் சக்கரம் கழண்டு விழும் காட்சி, அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Flights wheel gets chuck out during take off video

தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்ட அந்த பயணி, தான் பயணிக்கும் விமானத்தில் சக்கரம் ஒன்று தீப்பிடித்து கழண்டு விழுவதாகவும், ஆக 2020-ஆம் வருடம் தடுக்க, சிறப்பாகவே தொடங்குவதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டிருந்தது போல

அந்த வீடியோவில் விமானம் மேலே ஏறிய நேரத்தில், விமானத்தின் சக்கரம் ஒன்று தீப்பிடித்து விமானத்திலிருந்து கழன்று விழுகிறது.

அதன்பின் இந்த விமானம் அதிவேகத்தில் மேலெழுந்து பறக்கிறது. இதுபற்றி விளக்கமாக பதிவிட்டுள்ள ட்விட்டர்வாசிகள் நல்ல வாய்ப்பாக, இந்த விமானம் அந்தரத்தில் பறக்கும்போது அந்த சக்கரம் கழண்டு விழவில்லை என்றும் இந்த வீடியோவுக்கு பின்னர் எந்த ஒரு விமான விபத்தும் எங்கும் நிகழவில்லை என்பதனால் இந்த விமானம் தப்பித்ததாகவே நம்பலாம் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Tags : #FLIGHT #VIDEOVIRAL