“15 செகண்ட்ஸ் டைம்.. என் குழந்தைக்கு முடியல”.. மெடிக்கலில் சம்பவம் செய்த “ஐ அம் சாரி” திருடன்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Jan 10, 2020 05:34 PM
அமெரிக்காவின் பிலடெல்பியாவில், தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, நபர் ஒருவர் அங்குள்ள மருந்தகத்தில் கொள்ளை அடித்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள ரைட் எய்ட் எனும் மருந்தகத்தில் சாம்பல் நிறத் தொப்பி, கருப்பு நிறக் கண்ணாடி, கைகளில் கிளவுட்ஸ் அணிந்தபடி செல்லும் நபர், கடையில் அங்கும் இங்குமாக நடமாடுகிறார். அதன் பின் ஒரு துண்டு சீட்டை பில் போடுபவரிடம் நீட்டுகிறார்.

அந்த துண்டுச் சீட்டில்,‘உங்களுக்கு 15 செகண்ட்ஸ் டைம் தர்றேன். அதுக்குள்ள உங்க கிட்ட இருக்கும் பணம் அனைத்தையும் கொடுங்க, என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இத செய்வதற்காக என்னை மன்னிச்சிடுங்க’ என்று எழுதியிருக்கவே, அதை படித்து அதிர்ந்து போன, அந்த பெண் பணியாளர், பயத்துடன் ஒரு பிளாஸ்டிக் பையில் ரூபாய் நோட்டுகளை வைக்க, அந்த மர்ம நபர் அந்த பிளாஸ்டிக் பையை மடித்து, தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறுகிறார்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ளதோடு, இதுகுறித்து பேசிய அமெரிக்க காவல்துறை, கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு வயது 30 முதல் 40 வரை இருக்கலாம் என்றும், முகத்தை மறைப்பதற்காக கண்ணாடி அணிந்துள்ள அந்த நபரை, இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தேவை என்பது அனைவருக்கும்தான் இருக்கும், ஆனால் அதற்காக இப்படி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
