“மச்சான அலேக்கா தூக்கு மாப்ள!”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்!”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jan 30, 2020 09:11 AM

நியூஸிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐசிசி யு19 (ICC U19 worldcup) உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியின் போது மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் கிரிக்கெட் என்பது ஒரு ஜெண்ட்டில்மேன் விளையாட்டாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

kirk mckenzie, WI injured, NZ Players carried him videoviral

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட, 47.5வது ஓவரில் களமிறங்கிய கிரிக் மெக்கன்ஸி (kirk mckenzie) 99 ரன்களை குவித்து ரசிகர்களை ஆரவாரத்தில் வைத்திருந்தார். இதனிடையே மெக்கன்ஸி எதிர்கொண்ட பந்து ஸ்டம்பில் பட்டுத் தெறித்து பாதத்திலும் பட்டு அவரை படுகாயத்துக்குள் தள்ளியது. எனினும் கிளார்க் வீசிய பந்தினால் 99 ரன்களில் அவுட் ஆன கிரிக் மெக்கன்ஸி மைதானத்தை வெளியேற முடியாமல் தவித்தார்.

கால்களில் காயம் இருந்ததால் நடக்க கூட முடியாமல் சிரமப்பட்ட அவரை, நியூஸிலாந்து அணி வீரர்களான ஜெஸ்ஸி டாஷ்காஃப்  (jesse tashkoff) மற்றும் ஜோசப் ஃபீல்டு  (joseph field) ஆகியோர் மைதானத்தில் இருந்து தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் அனைவரையுமே எழுந்து நின்று நெகிழவைத்துள்ளது. இத்தகைய பண்பினை பெற்ற

பிளாக்கேப்ஸ் (BLACKCAPS) என்கிற நியூஸிலாந்து அணியினருக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் ட்வீட்கள் பறக்கின்றன.

 

100வது ரன் அடிக்கும் முன் கிரிக் மெக்கன்ஸிக்கு இந்த நிலை ஏற்பட்டது. அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.5 ஓவருக்கு 238 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகிவிட்டது.  அதன் பின்னர் விளையாண்ட நியூஸிலாந்து அணி 49.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

Tags : #VIDEOVIRAL #NEWZEALAND #U19WORLDCUP #NZVWI #KIRK MCKENZIE