'சைகை' மொழியில் 'வீடியோ கால்'.. இணையவாசிகளின் இதயத்தை உருக்கும் 'வீடியோ!'.. வைரல் ஆகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 29, 2019 06:18 PM

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து வரும் நிலையில், உலகின் எதுவும் சாத்தியமாகியிருக்கிறது என்று சொல்லலாம்.

mans sign language in video calling wins internet video

மாற்றுத் திறனாளி ஒருவர் ஒரு பேக்கரியின் முன் அமர்ந்தபடி, தனது செல்போனில் யாருடனோ வீடியோ காலில் சைகை மூலம் பேசிக்கொண்டு இருக்கிறார். பேசவோ கேட்கவோ இயலாத அவர், தன்னம்பிக்கையுடன் தனது செய்கை மூலம் வீடியோ காலில் பேசுகிறார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா. அதில்,  ‘நாம் மொபைல் போன்களை எவ்வளவோ விமர்சிக்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் அவை நம்மை எடுத்துச் செல்வதற்கான வெளியையும் திறந்திருக்கின்றன என்பது நல்ல விஷயம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIDEOVIRAL