“ஆத்தாடி இது என்ன?”.. “பேசாம நாமளும் தாவிடுவோம்... தாவுடா செவலை தாவு!”.. “வைரல் ஆகும் வீடியோ!”

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Jan 24, 2020 06:42 PM

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், மழைச்சாலையின் குறுக்கே கிராஸ் செய்து நடந்து செல்லும் மாடுகள் சாலையில் நடுவே இருந்த வெள்ளை கோடுகளை தடுப்பு என்று நினைத்து தாண்டித்தாண்டி ஓடும் காட்சி வைரலாகி வருகிறது.

Some hurdles are just in mind, this video is better example

வனத்துறை அதிகாரி பர்வீன் கேசவன் தன து ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை  ‘Some hurdles are just in mind. And you will not see a better example than this to prove it’ என்கிற கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார்.

அதாவது,‘சில தடைகள் மனதில் உள்ளன. இதை நிரூபிக்க இதை விட சிறந்த உதாரணத்தை நீங்கள் காண மாட்டீர்கள்’ என்கிற அர்த்தத்தில் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை, பலர் பகிர்ந்தும், இந்த வீடியோவுக்கு அவர் வைத்துள்ள கேப்ஷனை பாராட்டியும் வருகின்றனர்.

ஒருவர், ‘எனது வாழ்க்கையில் தற்போது நான் சந்திக்கும் பலவற்றை இப்படி கண்டுகொள்ளாமல் எளிதாகக் கடந்து போவதற்கான தன்னம்பிக்கையை

இந்த வீடியோ உண்டாக்கி, நேர்மறையான எண்ணத்தை உதயமாக்குகிறது. நன்றி’ என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

 

Tags : #COWS #VIDEOVIRAL