‘சான்ஸே இல்ல’... ‘அதுவும் அந்த அம்மாவின் எக்ஸ்ப்ரஷன் வேறலெவல்!’.. ‘சர்ப்ரைஸால்’ நெகிழ்ந்த குடும்பம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Siva Sankar | Jan 03, 2020 10:34 AM

ஒரு வருடம் கழித்து பெற்றோரை பார்த்த மகன் கொடுத்த வித்தியாசமான சர்ப்ரைஸ், இணையத்தில் வீடியோவாக வலம் வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெஸ்டோரண்ட் ஒன்றில் சாப்பிடுவதற்காக அப்பா, அம்மா, அவர்களின் மகள் மூவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது அங்கு வெயிட்டராக வரும் இளைஞர் ஒருவர் மெனு கார்டினை அந்த அப்பாவிடம் கொடுக்கிறார்.

son meets parents, surprised as fake waiter video viral

அப்போது கேமரா இடது புறமாக இருக்கும் அம்மாவின் பக்கம் திரும்புகிறது. அவரோ, வெயிட்டரை முதலில் யதார்த்தமாக பார்த்துவிட்டு, பின்பு நன்றாக உற்றுநோக்கி கவனிக்கிறார். அவரது சிந்தனைக்கு ஏதோ தட்டுப்படுகிறது. அதை வெயிட்டராக வந்த நபர் கண்டுபிடித்துவிட்டார். ஆம், ‘தன் அம்மா, வந்திருப்பது வெயிட்டர் இல்லை, தன் மகன்தான் என்று கண்டுபிடித்ததை’ உணர்ந்த அந்த இளைஞர் (வெயிட்டர்) தடாலென சிரிக்க ஆரம்பிக்கிறார். உடனே, அந்த அம்மா தன் மகனின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்.

அப்போதுதான் அந்த இளைஞரின் அப்பா, மகள் இருவரும் திரும்பிப் பார்க்கின்றனர். பின்னர் அனைவரும் நெகிழ்ந்துபோய் அந்த இளைஞரிடம் செல்லச் சண்டை போடுகின்றனர். ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்த அந்த இளைஞர், தன் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக வெயிட்டராக நடித்துள்ள இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று பலருக்கு தோன்றினாலும்,

வருஷக் கணக்காய் மகனை காணாத பெற்றோரின் இடத்தில் இருந்து இந்த சர்ப்ரைஸை உணர்ந்தால் அந்த கணம் அளப்பரிய தருணம் என்று இந்த வீடியோவைப் பார்த்த பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #VIDEOVIRAL