“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி”.. வீடியோவாக பரவும் “திக் திக் நிமிடங்கள்”.. செண்ட்ரல் ரயில்வே பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 16, 2020 05:39 PM

ஓடும் ரயிலில் பெண்ணின் கைப்பையை பிடித்து இழுத்துக்கொண்டு இறங்கிய நபரால், ரயிலில் இருந்த பெண் கிட்டத்தட்ட ரயிலில் விழுந்துவிட நேரிட்ட அபாயம் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வலம் வருகிறது.

not Indrayani express CR replies over bag snatching video

இதுகுறித்த வீடியோவை பதிவிட்ட நபர், புனே- மும்பை ரயில் பயணம் ஒன்றில், கம்பார்ட்மெண்ட்டின் கதவருகே பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் கைப்பையை, திடீரென வெளியில் இருந்து கதவு வழியே வந்த நபர் பிடித்து இழுத்துக்கொண்டே வேகமாக இறங்கியதாகவும், அதை பிடுங்க முயற்சித்த பெண் ஏறத்தாழ ஓடும் ரயிலில் இருந்து விழ நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீடியோவிலும் அதே சம்பவம் பதிவாகியிருந்தது.

மேலும் புனே-மும்பை ரயில் பயணத்தில் தினமும்

நடக்கும் தொடர் நிகழ்வாக ஓடும் ரயிலில் இருந்து செயின் பறிக்கப்படுவதும், கைப்பைகள் பறிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதுகுறித்து போலீஸார் விரைந்து ஒரு முடிவெடுத்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர்.

இதை ரி-ட்வீட் செய்த மத்திய ரயில்வே, 

‘இப்படியான வீடியோக்கள் பரவுகின்றன. ஆனால் இந்த வீடியோ மேற்குறிப்பிட்டுள்ளதுபோல் மும்பை இந்திரயானி எக்ஸ்பிரஸ் கிடையாது. அந்த ரயிலின் உள்புறம் சிசிடிவி கேமராவும் கிடையாது’ என்று தெரிவித்துள்ளது.

 

Tags : #TRAIN #VIDEOVIRAL #SNATCHING