“இதான் அந்த சர்ப்ரைஸா?”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது!”.. “வேறலெவல்” வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 16, 2020 11:10 PM

திருமணத்தின்போது வாழ்நாளில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்பதில் நண்பர்கள் கவனமாக இருப்பதை பார்க்க முடியும். அப்படி தங்களது நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் திருமண மேடையில் வந்து பரிசு கொடுக்கும் பெயரில் சின்ன சின்ன குட்டி கலாட்டாக்களை செய்து சர்ப்ரைஸ் கொடுத்தும் பலர் அசத்துவார்கள்.

friends presents different kind of gift in a wedding video

இப்படி நண்பர்கள் சிலர், தங்களுடைய நண்பர் ஒருவருக்கு வாழ்க்கையில் மறக்கவே மறக்க முடியாத, யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத ஒன்றை கிஃப்டாக கொடுக்க, மிக ஆவலுடன் வந்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்த கிஃப்டை மணமக்களும் மிகவும் ஆர்வத்துடன் பிரித்துப் பார்க்கின்றனர்.

பார்ப்பதற்கு சிறிய சைஸ் பேனர் போல் தெரிகிறது.

அதை முழுதாக விரித்தால்தான் தெரிகிறது, அது இங்கிலீஷ்காரன் படத்தில் நடிகர் வடிவேலு தனது கால்சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு ‘ஒன்றுமில்லை’ என்று எடுத்துக் காட்டும் படம்.  இந்த கிஃப்டைத்தான், இந்த நண்பர்கள் தங்களுடைய நண்பருக்கு மணமேடையில் வைத்து பரிசாக அளித்துள்ளனர்.

இதற்கு அர்த்தம் என்னவென்பது இந்நேரம் புரிந்திருக்கும். ஆம், ‘மன்னித்துவிடு நண்பா.. எங்களிடம் உனக்கு கொடுப்பதற்கு கிஃப்ட் ஒன்றும் இல்லை. இந்த அன்பைத் தவிர’ என்பதைத்தான் இந்த நண்பர்கள் இவ்வளவு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

Tags : #WEDDING #GIFT #FRIENDS #VIDEOVIRAL