'இது பூனை இல்ல.. சிங்கப் பூனை!'.. 'வேற லெவலில்' ஜம்ப் பண்ணி அசாத்திய திறமையை காட்டிய பூனை!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | Dec 30, 2019 06:42 PM
பூனைகளின் அசாத்திய திறமைகள் பலவும் ஆங்காங்கே வீடியோக்களில் வலம் வருவதைக் காண பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருக்கும் விநோதமான பூனைகளும், அவற்றின் விநோதமான சேட்டைகளும், செயல்களும் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் உள்ளதாலேயே, அவை இணையங்களில் ட்ரெண்ட் ஆகின்றன.
எவ்வளவோ வித்தியாசமான பல நுண்ணுணர்வுகளை வெளிப்படுத்தும் பூனைகள் பெரும்பாலும் பயிற்சி பெற்றவையாக உள்ளன. அப்படி ஒரு பூனைதான், தரைமட்டத்தில் இருந்து நீண்ட உயரத்துக்கு எம்பி குதித்து தன் எஜமானர் அடித்த ஃபுட் பாலை பிடித்து, தான் ஒரு சிறந்த கோல் கீப்பர் என்பதை நிரூபித்துள்ளது.
Goalkeeper pic.twitter.com/hM56Tlw3nf
— CCTV_IDIOTS (@cctv_idiots) December 28, 2019
இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Tags : #CAT #VIDEOVIRAL