'பெண்' இயக்குநர்களை புறக்கணிக்கும் 'ஆஸ்கர்'... எதிர்ப்பை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 'நடிகை'... "அப்படி என்ன செய்தார் தெரியுமா?"
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்கர் பரிந்துரையில் பெண் இயக்கநர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆடையில் பெண் இயக்குநர்களின் பெயர்களை தைத்து ஆஸ்கர் திருவிழாவுக்கு வந்த நடிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே, இதுவரை சிறந்த இயக்குநர்களுக்கான பிரிவில் ஐந்து பெண் இயக்குநர்கள்தான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில், கேத்ரின் பிகிலோ என்ற இயக்குநர் மட்டுமே ஆஸ்கரை வென்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்த பிரபல நடிகை நடாலி போர்ட்மென் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
காரணம், ஆஸ்கரில் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரைக்கப்படாத பெண் இயக்குநர்களின் பெயர்களை அவர் தனது ஆடையில் தைத்து அணிந்து வந்திருந்தார். அவர் தனது ஆடையில் `ஹஸ்ட்லர்ஸ்’, `தி ஃபேர்வெல்', `லிட்டில் வுமன்', `எ பியூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹூட்', `குயின் & ஸ்லிம்', `ஹனி பாய்', `போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி ஆன் ஃபயர்' மற்றும் `அட்லான்டிக்ஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர்களின் பெயர்களை தைத்திருந்தார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
I see it, I like it, I want it, I got it
I want it, I got it, I want it, I got it
I want it, I got it, I want it, I got it.#NataliePortman #Oscars2020 😱❤️
— César Rodríguez (@cegrafo) February 10, 2020
