'இன்னும் பயிற்சி வேண்டுமோ?'.. 'இப்படியா வந்து சிக்கிருக்கோம்!'.. ஏடிஎம் திருடன் பட்ட பாடு!.. 'வீடியோ'

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Dec 24, 2019 11:17 AM

ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து, பணம் திருட முயற்சித்த திருடன், முட்டாள்தனமாக மாட்டிக்கொண்ட சிசிடிவி காட்சி, இணையத்தில் வலம் வருகிறது.

ATM robber forgets How to Open the door Hilarious video

சீனாவில், பார்க்க டிப்டாப்பாக இருக்கும் திருடன் ஒருவன், ஏடிஎம் மையத்துக்குள் உள்நுழைகிறான். உள் நுழைந்ததும், ஏடிஎம் மானிட்டரின் முன்னால் போய் நின்று பார்க்கிறார். திருடுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால், ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால், மீண்டும் தனது முயற்சி தோற்றுப்போகவே, வெளியில் செல்ல முயற்சிக்கிறார்.

ஆனால் அதற்குள் கதவு பூட்டிக் கொள்கிறது. பூட்டிக்கொண்ட அந்த கதவைத் திறக்க முடியாமல் கதவை ஆட்டி, ஆட்டி திறக்க முயற்சிக்கிறார். இன்னும் பயிற்சி வேண்டுமோ என்பது போல் ஃபீல் பண்ணும் அந்த நபர், பின்னர் அங்கிருந்த ஒரு ட்ரேவை எடுத்து அந்த கதவை உடைத்து கதவைத் திறக்க முயற்சிக்கிறார்.

ஒருவழியாக கதவைத் திறந்து எஸ்கேப் ஆனாலும், ஏடிஎம் அலாரம் அடித்ததை அடுத்து அலர்ட் ஆன போலீஸார் விரைந்து வந்து திருடனை கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.

Tags : #VIDEOVIRAL