அட இதல்லவா உலக அதிசயம்! பெட்டிக்கடை நடத்தி பிழைக்கும் அதிசய நாய்! ஆச்சரியமூட்டும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Mar 30, 2019 07:32 PM
ஜப்பானின் ஹோக்கைடோ தீவில், கென்-குன் என்கின்ற நாய், சொந்தமாக பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறது.
இந்த பெட்டிக்கடையில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு முதலிய கிழங்குகள் கிடைக்கிறது. மேலும், இந்த கடையின் கவுன்டருக்குப் பின்னால் கென்-குன் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு பக்கத்தில் இருக்கும் பலகையில், ‘நான் ஒரு நாய் என்பதால், உங்களுக்கு சில்லரையைத் தர முடியாது' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், கென்-குன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், எந்த கிழங்கு வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு, அதற்கான பணத்தையோ, அல்லது அதற்கு மேலோ அங்குள்ள பணப் பெட்டியில் போட்டு விடுகின்றனர். கிழங்கிற்கான காசு போக மிச்சம் இருக்கும் பணத்தை கென்-குன் தன் உணவிற்காக எடுத்துக்கொள்கிறது.
இந்நிலையில், கென்-குன்க்கு, வெறும் வியாபாரம் செய்வது மட்டும் வேலை கிடையாது. மேலும், தனது உரிமையாளருடன் சேர்ந்து கென்-குன் நாள் இறுதியில், நகரத்தை ஒரு ரவுண்டு அடித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
வைரல் வீடியோ: https://youtu.be/0F1t7ATF3nU
இந்த கென்-குன் பற்றிய செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சமத்தாகவும் சாமர்த்தியமாகவும் வியாபாரம் பார்த்து வரும் கென்-குன்யை பலரும் பாராட்டி வருகின்றனர்.