போற வழியில் பெங்களூர் வீதிச் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாண்ட கிரிக்கெட் பிரபலம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Mar 28, 2019 02:16 PM
கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனின் அசத்தலான பெர்ஃமார்மென்ஸை பார்த்துவந்த கிரிக்கெட் உலகம் தற்போது அவரது கமெண்ட்ரியில் லயித்து வருகிறது.

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், தற்போது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் கமெண்ட்ரி பேசி வருகிறார். அதன் பொருட்டு இன்று பெங்களூரின் சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடக்கும் ஐபிஎல் போட்டியில் கமெண்ட்ரி கொடுப்பதற்காக பெங்களூரில் தற்போது இருக்கிறார்.
இதன் பொருட்டு பெங்களூரில் ரெய்டு போய்க்கொண்டிருந்த கெவின் பீட்டர்சன் திடீரென ஓரிடத்தில் நிறுத்தி ஸ்ட்ரீட் மேட்ச் விளையாண்டுக்கொண்டிருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாண்டுள்ளார். அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் தங்களுடன் கிரிக்கெட் விளையாண்டதால் நெகிழ்ந்த சிறுவர்களுடன் கெவின் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நான் சாலைமார்க்கமாக சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, கிரிக்கெட் விளையாண்டதாகவும், எப்போதும் இப்படி இருக்கவே இரும்பும் தான், இன்று இதைச் செய்ததாகவும் குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார். முன்னதாக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் நோ பால் சர்ச்சையிலும் கெவின் பீட்டர்சன் தனது கருத்தினை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கெவின் பீட்டர்சன் வெகு இயல்பாக ரோட்டோரத்தில் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு சிறுவர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
I wasn’t very good...! 😂 #GullyCricket pic.twitter.com/IrYY63PonJ
— Kevin Pietersen🦏 (@KP24) March 28, 2019
