ஹைஹீல்ஸ் அணிஞ்சே ஆகணுமா? #METOO போல, புதிய #KUTOO .. வைரலாகும் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 14, 2019 08:59 PM

ஜப்பானில் உள்ள பல பெருநிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குட்டைப்பாவாடை, ஹைஹீல்ஸ் உள்ளிட்ட அதிரடியான பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

new campaign started in japan in the name of KuToo against highheels

பெரும்பாலும் இப்படித்தான் அங்கு பெண்கள் வேலை செய்வதுண்டு. மேலும் பணியிடத்தில் அணிய வேண்டிய ஆடை அணிகலன்களுக்கான டிரஸ் கோடில் ஆண்-பெண்ணுக்கு இடையேயான பாலின வேறுபாடு கடைபிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதிலும் முக்கியமாக தங்களது அலுவலகத்துக்கு வேலைக்கு வரும் பெண்கள் இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான விதிமுறையான ஹை கீல்ஸ் அணிந்து பணிக்கு வரவேண்டும் என்கிற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டி அறிவுறுத்தப்படுவதால் பல பெண்கள் ஒன்று சேர்ந்து சேஞ்ச்.ஆர்க் என்கிற சமூக வலைதள அமைப்பு மூலம் ஜப்பானின் வார்த்தையான KutSoo(ஜப்பானில் வலி என்று அர்த்தம்)என்கிற வார்த்தையில் இருந்து #KuToo என்கிற ஹேஷ்டேகின் கீழ் கடும் எதிர்ப்பைக் காட்டி பொராடி வருகின்றனர்.

இதற்கென 15 ஆயிரம் பெண்களைத் திரட்டி, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பெண்கள் இந்த வலைதளம் மூலம் கையெழுத்திட்டு அமைதிவழியில் போராட்டங்களைச் செய்து வருகின்றனர். தற்போது இதன் டார்கெட் 25 ஆயிரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதனை முதலில் தொடங்கி வைத்த ஜப்பானின் மாடல் அழகியான, யூமி இஷிகாவா இதுபற்றி பேசும்போது, ‘இப்படியான விதிமுறைகள் பெண் பாலின வேறுபாட்டை வலியுறுத்துவதோடு, மனித உற்பத்திச் சக்தி மற்றும் சுகாதாரத்தின் மீதான தீங்கினை விளைவிக்கும் வகையில் பாதிப்பை உண்டாக்கும்’ என்று கூறியுள்ளார். இதேபோல் வளரும் குழந்தைகளுக்கு 12 வயது வரை ஷூக்களை அணிந்தால் மயிலின் என்கிற ஹார்மோன் சுரப்பி செயலிழந்து, அவர்களின் பாதநரம்புகள் முழுமையாக பிரிந்தோடுவதில் சிக்கல் உண்டாகும் என்கிற அதிர்ச்சியான ஆய்வு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #JAPAN #RULES #WOMEN #HIGHHEELS