‘சர்ச்சைக்குள்ளான அஸ்வின் எடுத்த விக்கெட்’.. ‘மாநில காவல்துறையின் அதிரடி செயல்’.. வைரலாகும் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 27, 2019 08:56 PM
மன்கடட் முறையில் அஸ்வின் எடுத்த விக்கெட்டின் புகைப்படத்தை வைத்து கொல்கத்தா காவல்துறை எடுத்த விநோத முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் கடந்த 23 -ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. அதில் 4 -வது லீக் டி20 போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின.
அப்போது 2 -வது இன்னிங்ஸில் போட்டின் மூன்றாவது ஓவரை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் வீசினார். அப்போது ராஜஸ்தான் அணியின் வீரர் பட்லர் க்ரீஸை தாண்டி சென்றார். அதனால் மன்கடட் முறையில் அஸ்வின் அவரை அவுட் செய்தார்.
இந்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அஸ்வின் எடுத்த விக்கெட் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதனை அடுத்து இன்று(27.03.2019) கொல்கத்தா அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதுகின்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் அஸ்வின் எடுத்த இந்த விக்கெட்டின் புகைப்படத்தை வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொல்கத்தா காவல்துறை ஒரு புகைப்படத்தை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Kolkata Police (@KolkataPolice) March 26, 2019