‘மீனுக்கு எய்ம் பண்ணா..நீ யார்றா நடுவுல’.. போட்டோகிராபரை விழுங்கிய பின் திமிங்கலம் செய்த காரியம்’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Mar 12, 2019 10:24 PM
கடலுக்கு நடுவில் சுற்றும் சுறா மற்றும் திமிங்கலங்களை படமெடுத்துக் கொண்டிருந்தவர் ரெய்னர் சிம்ஃப். திடீரென ஒரு நொடி அவருக்கு எங்கோயோ குகைக்குள் சென்றுவிட்டது போல் இருந்துள்ளது. ஆம், அவர் திமிங்கலத்தின் வாய்க்குள் சென்றுவிட்டார்.
51 வயதுடைய சிம்ஃப் ஒரு டைவ் டூர் ஆபரேட்டர் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் நல ஆர்வலர். 15 வருடங்களுக்கும் மேலாக தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடல் பகுதிகளில் வெவ்வேறு விதமான மீன்களின் துல்லியமான, அறிவியல் பூர்வமான விளக்கங்கள் கொடுக்கக் கூடிய வகையிலான புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருப்பவர்.
அப்படித்தான் இம்முறையும் சென்றுள்ளார் சிம்ஃப். ஆனால் பிரிட்ஸ் ரக திமிங்கிலம் ஒன்று தனக்கான இரைகளாக மீன்களைக் கண்டுணர்ந்து கப்பென்று அவற்றை கவ்வ வந்தபோது மீனோடு மீனாக தானும் திமிங்கலத்தின் வாயில் ஒரு செகண்ட் மாட்டிவிட்டு பின்னர் ஏதோ எசக்கு பிசக்கான உயிரினமும் நம் வாயில் சிக்கிவிட்டது போல என திமிங்கலமே ஒரு செகண்ட் ஷாக் ஆகி, தன் வயிற்றிலிருந்த தண்ணீருடன் சேர்த்து ஃபோஸாக தன்னையும் துப்பப் போகிறது என்பதை அறியாமல் இருந்துள்ளார் சிம்ஃப. ஆம், நடந்தது இதுதான்.
இதுகுறித்து பேசிய சிம்ஃப், திடீரென யாவும் இருட்டாகிவிட்டதாகவும், தன் இடுப்பைச் சுற்றி அழுத்தம் ஒன்றை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திமிங்கலத்தின் வாயில் இருந்து விடுதலையான சிம்ஃப் மீண்டும் தேடியது தனது கேமராவைத்தான். தனது கேமராவுக்கும் சர்ஃபருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பது தெரிந்தவுடன், உடனே கேமராவை எடுத்துக்கொண்டு திமிங்கலத்தை படம் பிடிக்கச் சென்றிருக்கிறார் மனிதர். இதையெல்லாம் பெருத்த அச்சத்துடன் அங்கிருந்த சிம்ஃபின் மனைவியும் சக புகைப்படக் கலைஞருமான சில்க் பார்த்து பரிதவித்துள்ளார்.
இதில் ஹைலைட் என்னவென்றால் அடுத்த பிறவியில் திமிங்கலமாக வேண்டும் என்றும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் 5 வருடங்களுக்கு முன் வெள்ளை ராட்சத சுறாவிடம் சிக்கி தப்பித்தவர் சிம்ஃப் என்பது குறிப்பிடத்தக்கது. திமிங்கலம் தூ என்று துப்பியதால் இம்முறை உயிர் பிழைத்துள்ளார் சிம்ஃப்!