சைகோ போல் குரூரமாக நாயைத் தாக்கிய நபர்.. சிசிடிவியில் வெளியான பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 11, 2019 06:20 PM

நாய்க்குட்டிகளை ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் மனநோயாளிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்.

chennai man beaten up a dog in a brutal manner goes bizarre in CCTV

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, மூட்டை மூட்டையாக குட்டி நாய்க்குட்டிகளை அடித்துக் கொன்று அடக்கிவைத்திருந்த சைகோ நபர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல், தெருநாய்களை அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிய வடமாநிலத்தவரின் செயலும் புளூ கிராஸால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

இதேபோல் தற்போது தமிழ்நாட்டில் கோரமான சம்பவம் ஒன்றினை ஒருவர் செய்துள்ளார். சென்னை ஆவடியில் நாய்க்குட்டியை இரக்கமேதும் இல்லாமல் மிருகத்தனமான மனிதர் ஒருவர் கொடூரமாகத் தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதை அடுத்து பலரது கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

சென்னை ஆவடியை அடுத்துள்ளது காமராஜர் நகர். இங்கு கடந்த வாரம் 5 நாய்க்குட்டிகள் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து பலரும் பீதியில் இருந்தனர். பலரும் தத்தம் வளர்ப்பு நாய்க்குட்டிகளைப் பாதுகாப்பது பற்றிய அச்சத்தி உறைந்திருந்தனர். இந்நிலையில்தான், அப்பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர் நாய்க்குட்டி ஒன்றை துரத்தி துரத்தி கட்டையினைக் கொண்டு அடித்துள்ளார்.

இவ்வாறு கோரமாக நாய்க்குட்டிகளைத் தாக்குகிற மனப்பான்மை ஒரு சைகோவின் மனப்பான்மை என்பதால் இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் புளூகிராஸுக்கு தகவல் அளிக்க, புளூகிராஸ் இந்த விஷயத்தைப் பற்றி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளதை அடுத்து போலீஸார் அந்நபரை விசாரித்து வருகின்றனர்.

Tags : #VIRAL #BIZARRE #DOG #CHENNAI