மோடிக்கு ’ஸ்டெண்ட் மாஸ்டர்’ பட்டம் வழங்கிய அதிமுக அமைச்சர்! வைரலாகும் அமைச்சரின் பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Mar 28, 2019 08:37 PM

 

Admk minister rajendra balaji gives new nick name for modi goes viral

விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ’புதிய தமிழகம் கட்சி’யின் அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்நிலையில், திறப்பு விழாவை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், மிஷன் சக்தி விண்வெளி திட்டம் குறித்து பிரதமர் மோடியின் உரை பற்றியும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தியாவை பாதுகாக்கும்  “ஸ்டெண்ட் மாஸ்டர்”  தான் மோடி என்றும், மேலும் நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே மல்லுக்கட்டி தடுக்கக்கூடிய மனிதர் மோடி என்று கூறிப்பிட்டார். பின்னர், இந்தியாவின் பாதுகாவலராக பிரதமர் மோடி இருப்பது போல தமிழகத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பிரதமர் மோடியை “டாடி”  என்று சொல்லி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தற்போது அவரை   “ஸ்டெண்ட் மாஸ்டர்”  என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலை கிளப்பியுள்ளது கூறிப்படத்தக்கது.

Tags : #NARENDRAMODI #RAJENDRA BALAJI #VIRAL