மகளின் கல்யாண பத்திரிகையில் இப்படி ஒரு காரியத்தை செய்த விநோத தந்தை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 11, 2019 03:43 PM

பீகாரில் மகளின் திருமண பத்திரிகையில் மோடிக்கு வாக்களிக்கக் கோரி தந்தை ஒருவர் பிரச்சாரம் செய்திருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

marriage invitation demands to vote for Modi in Lok Sabha polls

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள சிவான் காலா கிராமத்தைச் சேர்ந்த அசோக் சிங், 15 ஆண்டுகளாக குவைத்தில் இருந்துள்ளார். இவர் அண்மையில்தான் தனது மகளின் திருமணத்துக்காக இந்தியா வந்துள்ளார். இவர் தனது மகளின் திருமண அழைப்பிதழில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ள விஷயம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவந்துவிட்ட வேளையில் தனது மகளுக்கு மார்ச், 12-ஆம் தேதி (செவ்வாய் கிழமை) நிகழவுள்ள திருமண அழைப்பிதழில் அசோக் சிங், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு வாக்களித்து மீண்டும்  மோடியையே பிரதமராக்கக் கோரி பிரச்சாரம் செய்துள்ளார்.

மேலும் இதுபற்றி பேசியுள்ள அசோக் சிங், தங்களைப் பற்றி மட்டுமே சுயநலமாக நினைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், நாட்டைப் பற்றி நினைக்கும் மோடியை விட சிறந்த தலைவர் இருக்க முடியாது என்பதால் மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று, தான் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

Tags : #NARENDRAMODI #BJP #INVITATION #VIRAL #LOKSABHAELECTIONS2019 #PRIMEMINISTER