‘கோலி ஒரு....’ கோடிட்ட இடத்தை நிரப்பிய வீரர்.. கோபமாகி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 11, 2019 11:16 PM

சர்வதேச தரவரிசைப்பட்டியல்களில் தனது கடின உழைப்பினால் இடம் பிடித்து, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்பவர் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி.

England batsman Ben Duckett calls Virat Kohli a joke, goes bizarre

அவரைப்பற்றி தரக்குறைவாக கமெண்ட் செய்துள்ள இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் நெட்டிசன்களுக்கு இரையாகியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்காக கடந்த 2016-ல் அறிமுகமானவர் பென் டக்கெட். தற்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பிஸியாக ஆடிவரும் பென் டக்கெட் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் விளையாண்ட கடைசி 2 போட்டியும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள்தான்.

இந்த சூழலில் ஷவுட்ஸ் என்கிற ட்விட்டர் பக்கத்தை நடத்தி வரும் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விராட் கோலி ஒரு ----- என்று பதிவிட்டு, அந்த வெற்றிடத்தை நிரப்புமாறு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்த பென் டக்கெட்,  விராட் கோலி ஈஸ் ----- என்கிற இடத்தில் அந்த கோடிட்ட இடத்தை நிரவுப்புவதற்கான வார்த்தையாக எ ஜோக் என்று ரிப்ளை செய்தார்.  இதன் மூலம் ‘விராட் கோலி ஈஸ் எ ஜோக்’ என்று பொருள்பட பென் டக்கெட் கூறியுள்ளதை பார்த்த நெட்டிசன்களுக்கு வந்தது பாருங்கள் கோபம். இப்படி சொல்லிவிட்டு போய்விட முடியுமா சும்மா?

அதனால் கோலியின் தீவிர ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் சென்றார். அதன்படி, கோலி  அடித்த சர்வதேச ரன்களில் பாதி ரன்களாவது நீ எடுப்பியா? விராட் கோலியே ஒரு ஜோக் என்று சொன்னால் இங்கிலாந்து வீரர்களான உங்களை எல்லாம் என்னவென்று சொல்வது?, பென் டக்கெட் நாங்க உங்களைப் பத்தி கேக்கல,  பேர்லயே டக் வெச்சுக்கிட்டு 66 சர்வதேச சதங்களை எடுத்த கோலிய பத்தி சொல்லலாமா,  கண்ணாடி முன் நின்று கொண்டுதானே இப்படி சொன்னீங்க?, பென் உங்க மனநலம் விரைவில் குணமாக நாங்க பிரார்த்திக்கிறோம் என்றெல்லாம் கூறி விதவிதமாக வறுத்தெடுத்துள்ளனர்.

ஆனால் ஒரு சிலரோ, பென் டக்கெட் நல்ல விதத்தில்தான் கூறி, விராட் கோலியை புகழ்ந்துள்ளார். அவரது மொழியைத் தவறாக புரிந்துகொண்டு இந்தியர்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

Tags : #VIRATKOHLI #VIRAL #TWEET #KOHLI #BCCI #CRICKET