450 நாளாக ‘இவர்’சாப்பிடுவது இந்த ஒரே ‘டிஷ்’தான்... அப்படி என்ன இருக்கு அதுல?

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Mar 18, 2019 03:30 PM

பொதுவாகவே, நமக்கு பிடித்தமான உணவு என்று ஒன்றை நாம் முடிவு செய்துவிட்டால், அவற்றை விரும்பி சாப்பிடும் பொருட்டு, உண்மையில் மற்ற உணவுகளை முழுமையாக வெறுக்க மாட்டோம்.

man eats only chicken rice for more than 450 days goes bizarre

பிடித்த உணவு வகைகளைப் போல், பிடிக்காத உணவு வகை என்று ஏதேனும் இருக்கும், அவற்றைத் தவிர்த்து பிடித்த ஒரு உணவுக்காக மற்ற எல்லா உணவு வகைகளையும் தொடுவதில்லை என்று நாம் முடிவு செய்துவிட முடியுமா? ஆனால் தனக்கு பிடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக அந்த ஒரு வகையான உணவை மட்டுமே 15 மாதங்களாக உண்ணும் ஒருவரைக் கண்டால் நமக்கு வியப்புத்தான் வரும். அப்படி வியப்பான ஒரு மனிதர் சமீபத்தில் வைரலாகியுள்ளார்.

பீஸா, பர்கர் போன்ற உணவுகளை விருப்ப உணவாக உண்ணுவது போலவே, தினமும் தனக்கான பிடித்தமான உணவான சிக்கன் ரைஸை மட்டுமே சுமார் 15 மாதங்களுக்கு மேலாக, அதாவது 450 நாட்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மனிதர் உண்டு வந்திருக்கிறார். எப்படி சிக்கன் ரைஸுக்கு அடிமையானார் என்று தெரியாத இவர், தன்னை ஜேஜே ரசிகர், அதாவது சிக்கன் ரைஸ் ரசிகர் என்று கூறிக்கொள்கிறார்.

அதன்படி, தினமும் தான் உண்ணும் சிக்கன் ரைஸை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பக்கத்தில் எத்தனாவது நாளாக தொடர்ந்து சிக்கன் ரைஸை உண்ணுகிறார் என்றும் குறிப்பிடுவது இவரது ஸ்டைல். இதனால் இவரைப் போலவே சிக்கன் ரைஸ் பிரியர்கள் பலரும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின் தொடருவதோடு, இவரின் போஸ்டுகளுக்கு லைக்ஸ்களை வாரி வழங்குகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

everyday #456

A post shared by ji fan fan (@kuey.png) on

Tags : #FOOD #BIZARRE #VIRAL #CHICKENRICE