'இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்துருக்கு பாரேன்'...வைரலாகும் வில்லேஜ் விஞ்ஞானியின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 30, 2019 03:43 PM

பொதுவாக சிறுவர்களோ அல்லது இளைஞர்களோ ஏதாவது விளையாட்டாக கண்டுபிடிக்கும் போது அவர்களை வில்லேஜ் விஞ்ஞானி என்ன கிண்டல் செய்வது வழக்கம்.அந்த வகையில் இளைஞர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

College Student Attached A Mosquito Bat To Table Fan video goes viral

கொசு தொல்லை என்பது தற்போது பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது.அதற்காக நாம் பல்வேறு தடுப்பு முறைகளை எடுத்தாலும் கொசுக்களை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது.வீட்டில் கொசு வலை,கொசுக்களை எதிர்க்கும் மருந்துகள் என பல வகைகளில் கொசுக்களை கட்டுப்படுத்த நாம் முயன்று வருகிறோம்.அந்த வகையில் கொசு பேட் பல்வேறு வீடுகளில் பயன்படுத்தபடும் ஒன்று.சீனா இறக்குமதியான இந்த கொசு பேட் தான் நமது தூக்கத்திற்கு பல வகைகளில் துணை புரிகிறது.

இதனிடையே இளைஞர் ஒருவர் இரவில் தொந்தரவு இல்லாமல் தூங்குவதற்காக டேபிள் பேனில் கொசு அடிக்க பயன்படும் பேட்டை கட்டிவைத்து கொண்டு தூங்கும் வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.அதை பதிவிட்டிருக்கும் நபர் ''அவர் 3019-ல் வாழ்கிறார்' என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

Tags : #TWITTER #MOSQUITO BAT #TABLE FAN