சானியாவின் சகோதரிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகனுக்கும் திருமணமா? .. வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 07, 2019 04:28 PM
டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் சகோதரிக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் தற்போது தெலுங்கானா மாநில காங்கிரஸில் செயல் தலைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அஸாத்.
சானியா மிஸ்ராவின் சகோதரி அனம் மிஸ்ராவும், அஸாத்தும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை அனம் மிஸ்ரா மற்றும் அஸாத் ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அண்மையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா-சோயப் மாலிக் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது சானியா மிஸ்ரா மருத்துவனையில் இருந்து குழந்தையுடன் செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சானியா மிஸ்ரா சகோதரியான அனம் மிஸ்ரா மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகன் அஸாத் ஆகிய இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் இந்த வருட இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
