வேலைக்கே போகாமல் ‘செல்ஃபி’ போஸ்ட் செய்து டாலர் டாலராக சம்பாதிக்கும் இளம் பெண்.. எப்படி?
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Mar 05, 2019 12:16 PM
இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ளது கன்னோக். இங்கு வசிப்பவர்தான் லூட்டி மைல்ஸ்.
வீட்டில் எப்போதும் செல்போன் கையுமாகவே இருக்கும் இவருக்கு செல்ஃபி மீது இருக்கும் பிரியத்தைச் சொல்லவே வேண்டும். எப்போதும் கழுத்தைத் திருப்பிக்கொண்டும் நாக்கைத் துருத்திக்கொண்டும் விதவிதமான செல்ஃபிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பொழுதுபோக்காகவே கொண்டவர்.
அவருக்கு அவரது நண்பர்கள் ஒன்லிஃபேன்ஸ் என்கிற வெப்சைட்டை பற்றி கூறியுள்ளனர். இந்த வெப்சைட்டை பார்ப்பவர்கள் எல்லாம் பேருக்கேற்றார்போல ரசிகர்கள்தான். ரசிகர்கள் மட்டும்தான்.
இங்கு பதிவிடப்படும் செல்ஃபி புகைப்படங்களை வைத்து இந்த சைட்டின் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது. அந்த வருமானத்தில் சுமார் 80 சதவீதம்வரை செல்ஃபி எடுத்து பதிவிடுபவர்களுக்கு கொடுக்கப்படுகிறதாம். அதன் மூலம்தான் லூட்டி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செல்ஃபிகளை போஸ்ட் செய்யத் தொடங்கி தற்போது 7,400 டாலர் வரையில் தன் பெற்றோர்களின் விருப்பத்தோடு சம்பாதித்துள்ளாராம். மேலும் இதன் மூலம் சுமாராக மாதம் 3,000 டாலர்கள் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த வேலைகள் கிடைக்கும்வரை இதை பகுதி நேரமாகச் செய்யலாம் என நினைத்த லூட்டி இதையே முழுநேரமாக செய்யத் தொடங்கியுள்ளார். காரணம் இதில் வரும் வருமானம்தான். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆலோசனைகள் கிடைப்பதாகவும் அதன்படி புகைப்படம் எடுப்பதை மேம்படுத்திக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.