பிரேக்-அப்புக்கு பேனர் வைத்த மகா பிரபு இவர்தான்.. வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Mar 18, 2019 05:26 PM
காதலில் காதலைச் சொல்வதற்கு பலரும் கவிதை எழுதுவதில் தொடங்கி, காதலிக்கும் நபரை கவனிக்க வைப்பதற்கென பல விதமான கிரியேட்டிவான வேலைகளைச் செய்வதுண்டு.

காதல் ஓகே ஆகிவிட்டால் அந்த கிரியேட்டிவிட்டி எல்லாம் எங்கு சென்றுவிடுமோ என்று தெரியாது. ஆனால் காதலிக்கத் தொடங்கிய பிறகு காதலில் ஊடல் என்று சொல்லப்படும் செல்லச் சண்டைகளும், சின்னச் சண்டைகளும் விதவிதமாக உருவாகும். அவற்றை எல்லாம் சமாளித்து காதலையும், காதல் உறவையும் காப்பாற்றுவதே முக்கிய கடமையாகவிடும்.
ஆனால் சிலர் அப்படியெல்லாம் கருத்து வேறுபாடுகளை அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழவேண்டிய அவசியம் இல்லை, கருத்துவேறுபாடுகளும், உறவில் அதிகப்படியான முரண்களும் உண்டாகிவிட்டால், காரியத்தனங்களுக்காக காதலிப்பது போல் நடித்துக்கொண்டிருப்பதை விட, இருக்கவே இருக்கிறது ‘பிரேக்-அப்’ என்கிற வார்த்தை என்று பிரேக்-அப் முடிவினை எடுத்துவிடுவர்.
அப்படித்தான், இந்தோனேசியாவில் காதலர் ஒருவர் தனக்கு உண்மையாக இல்லாத காதலியை உலகத்துக்கு தெரியுமாறு பிரேக்-அப் பண்ண வேண்டும் என நினைத்துள்ளார். அதற்கென தன் காதலியைத் திட்டியும் அவருக்கு சில மெசேஜ்களை சொல்வது போலவும், விளம்பர பாணியிலான பேனர்களை வடிவமைத்து ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளார். இந்த பேனர் புகைப்படங்களும், இந்த காதலர் தனது காதலியுடன் சண்டையிடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Katakan PUTUS ter-SAVAGE !!!
— Debt Collector (@myxzyptlx) March 9, 2019
baliho mameeennn ... Balihooo !!! pic.twitter.com/FjGSxMXPBW
