என்ன பாத்தா எப்டி இருக்கு?.. ஐலவ்யூ சொன்ன இளைஞருக்கு.. தர்ம அடிகொடுத்த போலீஸ்.. வீடியோ உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 17, 2019 08:50 PM

காக்கி சீருடையில் இருந்த பெண் போலீசிடம் ஐலவ்யூ சொல்லி இளைஞர் அடிவாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Youth Proposing lady police, Video goes viral on internet

பிராங்க்பாய் என்ற யூடியூப் சேனல் ஒன்று தெலுங்கில்  இருக்கிறது. இதில் உள்ள இளைஞர் ஒருவர் பெண்களிடம் சென்று ஐலவ்யூ சொல்லி பிராங்க் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் சமீபத்தில் டியூட்டியில் இருந்த பெண் போலீசிடம் சென்று உருகி,உருகி ஐலவ்யூ சொல்ல ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் அவரை அடித்து விடுகிறார்.

தொடர்ந்து அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் வா, என்று கூப்பிட அதற்கு அந்த இளைஞர் தான் ஒரு யூடியூபர் என்றும், உங்களது சகோதரி ஒருவர்தான் இவ்வாறு செய்ய சொன்னார் என்றும் கூறுகிறார். அதைக்கேட்டும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. கெட்ட,கெட்ட வார்த்தைகளில் அவரை திட்டுகிறார்.அந்த இடங்களில் பீப் சத்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Credit: PrankBoy Telugu

Tags : #POLICE