‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 09, 2019 11:13 AM

சேலம் அருகே காரில் இருந்து நிர்வாணமாக காதல் ஜோடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Naked dead bodies of lovers found in car near Salem

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரம் செய்து வரும் கோபி என்பவருடைய மகன் சுரேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் சுரேஷ் கல்லூரி முடிந்து வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர். இந்நிலையில் கோபிக்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சுரேஷ் மற்றும் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பது தெரியவந்துள்ளது. சுரேஷும், ஜோதிகாவும் காதலித்து வந்ததாகவும், அதற்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரின் சடலமும் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தனிமையில் இருந்தபோது மூச்சடைத்து உயிரிழந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SALEM #LOVERS #COUPLE #DEADBODY #NAKED #CAR #POLICE #COLLEGE #STUDENTS