'வீட்ல சொல்லிடுவேனு பணம் கேட்டு மிரட்டுனதோட'.. காவலருக்கு பாடம் புகட்ட.. 16 வயது பெண் செய்த காரியம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 16, 2019 01:09 PM

திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணும், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்த நிலையில், அங்குள்ள மேலபுதுக்குடி அருஞ்சுனை அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டுள்ளனர்.

police man arrested under pocso act after threatened couple

இதைப்பார்த்த சிறுமியின் ஊர்காரரான பாலமுருகன், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவலர் சசிகுமாருக்கு கூறிய தகவலின் பேரில் அவர் தனது பைக்கில் அந்த இடத்துக்கு வந்து, அந்த காதலர்களிடம், ‘நீங்க யாரு? எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?’ என்று கேட்டதோடு இருவர் வீட்டிலும் காதல் விவகாரத்தைச் சொல்லிவிடுவதாகக் கூறி 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், கூறப்படுகிறது.

அதன் பின் கிருஷ்ணன் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதும், அந்த பெண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, கிஷ்ணனிடம் பணம் எடுத்துவரச் சொல்லி அனுப்பிய காவலர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தபோது அந்த பெண் அலறியுள்ளார். அதற்குள் கிருஷ்ணன் 5 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அங்கு வந்துவிட, அந்த பணத்தை பெற்றுக்கொண்ட காவலர் சசிகுமார் இருவரையும் தகாத வார்த்தையால் திட்டியதாகவும், பாலமுருகன் தங்கள் உறவைப் பற்றி ஊருக்குள் அவதூறு கருத்து பரப்பியதாகவும் அந்த பெண் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து சசிகுமாரும் பாலமுருகனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #POLICE #MINOR GIRL