‘ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு வந்த’.. ‘இளைஞரின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோய் நின்ற சென்னை போலீஸார்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 14, 2019 04:08 PM

சென்னையில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர் கத்தியோடு வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man brutally murdered wife over family issue in Chennai

சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞர் ஒருவர் கத்தியோடு வந்துள்ளார். சட்டையிலும் ரத்தக் கறையோடு இருந்த அவரிடம் காவலர்கள் விசாரித்தபோது, “என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோய் உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்ற காவலர்கள் அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவருடைய பெயர் கிட்டப்பன் (35) என்பதும், அவருடைய மனைவி பெயர் சுமதி (27) என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் சுமதி மீது சந்தேகமடைந்த கிட்டப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மகன்களோடு சுமதி தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சுமதி கணவரைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கிட்டப்பன் சுத்தியலால் சுமதியின் தலையில் அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து அவர் அங்கேயே மயங்கி விழ பின் கிட்டப்பன் கத்தியை எடுத்து அவருடைய கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

Tags : #CHENNAI #HUSBAND #WIFE #BRUTAL #MURDER #POLICE