8 வயது 'சிறுமிக்கு' பாலியல் வன்கொடுமை.. 'சிசிடிவி'யில் பார்த்து.. அதிர்ந்து போன போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 10, 2019 04:32 PM

8 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சிசிடிவியில் பார்த்த போலீசார் அதற்கு காரணமான நபரை கைது செய்துள்ளனர்.

Police Arrest Man After Street Cameras Show Him Raping 8-Year-Old

ராஜஸ்தான் மாவட்டம் ஆல்வார் பகுதியை சேர்ந்த சிசிடிவியை சமீபத்தில் பார்த்த போலீசார் அதில் 8 வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்தனர். அதில் கடந்த 6-ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு அந்த சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இருந்தன.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியின் வீட்டுக்கு இதுதொடர்பாக போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இந்த சம்பவத்தை கூறவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்ய, போலீசார் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #CCTV #POLICE