‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 16, 2019 12:58 PM

மேற்கு வங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்ற பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Family killed over insurance policy issues in West Bengal

கடந்த 8 -ம் தேதி விஜயதசமி நாளன்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் பாந்து, அவரது மனைவி மற்றும் மகன் மர்மமான முறையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பங்கஞ் சர்கார் என்பர் போலீசாரிடம் தெரிவிக்கையில், ‘இரவு இளைஞர்கள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அப்போது என் வீட்டின் அருகில் உள்ள கோயிலை கடந்து செல்லும்போது ஒருவர் என்னை கடந்து வேகமாக ஓடினார். நான் அவரை திருடன் என நினைத்தேன். அதனால் உடனே அவரை துரத்திக்கொண்டு அருகில் இருக்கும் மசூதி வரை சென்றேன். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பிவிட்டார். பிராகாஷ் பந்து இந்த பகுதிக்கு குடிவந்து ஒரு வருடம்தான் ஆவதால் அவர் குறித்து அதிகம் தெரியாது’ என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதியில் செயல்பாட்டில் உள்ள செல்போன் எண்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது உட்பால் குமார் என்பவரின் செல்போன் எண் அந்த பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர் கொலை செய்யப்பட்ட பிரகாஷ் பாந்துவின் உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் உட்பால் குமாரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். முதலில் மறுத்த உட்பால் குமார் பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், ‘11 வருடத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை உட்பால் எடுத்துள்ளார்.வருடத்துக்கு ரூ.24,167 என பிரகாஷ் பாந்து மூலமாக பாலிசி பணத்தை செலுத்தி வந்துள்ளார். முதல் வருடத்துக்கான ரசிதை பிரகாஷ் பாந்து கொடுத்துள்ளார். ஆனால் அடுத்து வருடத்துக்கான ரசிதை பிரகாஷ் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பிரகாஷ் பாந்துவை கொலை செய்ய உட்பால் குமார் முடிவு செய்துள்ளார். அதனால் விஜயதசமி நாளன்று பிரகாஷ் பாந்துவின் வீட்டுக்கு உட்பால் குமார் வந்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷ் பாந்து குத்தி கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த பிரகாஷ் பாந்துவின் மனைவியான 8 மாத கர்ப்பிணி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #CRIME #WESTBENGAL #FAMILY #KILLED #INSURANCE #ARREST #INSURANCEPOLICY