பட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..! சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 10, 2019 05:18 PM

சென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

A country bomb has exploded on Ritchie Street in Chennai

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மலர். இவரது மகன் அழகுராஜா. இவர்கள் இருவரும் இன்று முற்பகல் திருவல்லிக்கேணி அண்ணாசாலை, ரிச்சி தெரு அருகே ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது. ஆனால் குறி தவறி குண்டு நடுரோட்டில் விழுந்து வெடித்து சிதறியது.

இதனை அடுத்து மலர் மற்றும் அழகுராஜை சுற்றி வளைத்த அந்த கும்பல் அவர்களை அரிவாளால் தாக்க ஆரம்பித்துள்ளது. அப்போது அழகுராஜா அவர்களிடம் தப்பி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனை அடுத்து மலரை தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மலர் ரவுடி ஒருவரின் மனைவி என்பதால் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை சீன அதிபரும், மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில் மக்கள் பரபரப்பான ரிச்சி தெருவில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #CHENNAI #BOMB BLAST #RITCHIE STREET