'நடு ராத்திரி நடந்த சண்டை'...'சொருகியிருந்த கத்தியை எடுத்தபோது... அறுபட்ட ஆணுறுப்பு! '...சென்னையில் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 09, 2019 01:19 PM

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த போது, கத்தி ஆணுறுப்பில் வெட்டி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband Secret Part Accidentally gets cut by Knife During Fight

சென்னை அயனவரத்தை சேர்ந்தவர் மனோகரன். கூலி தொழிலாளியான இவருக்கு, ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி சரிதா என்ற மனைவி உள்ளார். திருமண வாழ்கை சில மாதங்களிலேயே கசந்து விட, மனோகருக்கும் அவரது மனைவி சரிதாவிற்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனோகர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி சரிதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மனோகரின் கொடுமை எல்லை மீறி செல்ல, சரிதா அருகில் இருக்கும் தனது தாயாரின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே சம்பவத்தன்று நள்ளிரவு குடித்து விட்டு வந்த மனோகர் வீட்டில் சரிதாவை தேடியுள்ளார். அவர் தனது தாயாரின் வீட்டிற்கு சென்றதை அறிந்த மனோகர் அங்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த சரிதாவின் உறவினர் ராகவேந்திரன், மனோகரிடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே மனோகரன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கத்தி அவரது ஆணுறுப்பையும், அடிவயிற்றிலும் வெட்டியுள்ளது. இதில் அவருக்கு அதிகமாக ரத்த போக்கு ஏற்பட்டது. இருந்த போதும் வெளியே எடுத்த கத்தியை கொண்டு உறவினர் ராகவேந்திரனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த  ராகவேந்திரனையும், மனோகரையும் அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #MURDER #KILLED #CHENNAI #SECRET PART #WIFE #CUT