கல்யாணமான 'ஐஏஎஸ் அதிகாரி' மீது.. 20 வருட 'ஒருதலைக்' காதல்.. போதைப்பொருளை வைத்து.. பாதுகாப்பு அதிகாரி செஞ்ச காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 11, 2019 12:55 PM
திருமணமான பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது இருந்த ஒருதலைக் காதலால் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில்(CISF) அதிகாரியாக இருப்பவர் ரஞ்சன் பிரதாப் சிங்(45). 20 வருடங்களுக்கு முன் இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் போது பெண் ஒருவரை சந்தித்துள்ளார். இருவரும் உத்தரகாண்டில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் நான்கு மாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணை ரஞ்சன் சிங்கிற்கு பிடித்து போனது. அவர் மீது ஒருதலைக் காதலுடன் பழகி வந்துள்ளார்.ஆனால் அவர் ஐஏஎஸ் அதிகாரி ஆனவுடன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இருந்தாலும் அந்த பெண் அதிகாரியுடன் ரஞ்சன் சிங் தொடர்ந்து நட்பாக பேசி வந்துள்ளார். சமீபத்தில் அந்த அதிகாரி இவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் அவரை பழிவாங்க நினைத்த ரஞ்சன் சிங் அவரின் கணவர் காருக்குள் போதைப்பொருளை வைத்துவிட்டு, சிஐஎஸ்எப் அதிகாரிகளிடம் வேறு ஒரு மொபைல் நம்பரில் இருந்து தகவல் அளித்துள்ளார்.
அவர்கள் வந்து காரை சோதனை செய்து பார்த்ததில் 3 இடங்களில் போதைப்பொருள் இருந்தததை கண்டு பிடித்தனர். ஆனால் காருக்குள் போதைப்பொருள் 3 இடங்களில் இருந்ததும், முதலில் டெல்லி காவல்துறைக்கு தகவல் செல்லாமல் தங்களுக்கு தகவல் வந்ததும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தங்களுக்கு தகவல் வந்த மொபைல் நம்பரை ஆராய்ந்து பார்த்ததில் அந்த நம்பர் பெட்ரோல் பபங்கில் வேலை பார்க்கும் ஒருவருக்கு சொந்தம் என்பது தெரியவந்தது. அவரிடம் சென்று விசாரணை நடத்தியதில் யாரோ இருவர் அவசரமாக வந்து போன் கேட்டனர். கொடுத்தேன் என்றார்.
இதையடுத்து அந்த பெட்ரோல் பங்க் சிசிடிவியை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அதில் ரஞ்சன் சிங்கும், அவரது நண்பரும் போன் வாங்கி பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த டெல்லி போலீசார் அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஞ்சன்சிங் தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.