'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 16, 2019 02:11 PM

தோட்டத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவியை இரட்டை சகோதரர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Twin brothers harassed plus one student and killed in Madurai

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள். இதனிடையே மாணவியின் பிரேதே பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஓணாப்பட்டியைச் சேர்ந்த அம்மவாசி என்பவரது மகன் மாதவன் காவல்துறையிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் '' தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காததால் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறியுள்ளார்.

ஆனால் மாதவன் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர், தங்களது பாணியில் விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ''தனது பாட்டியின் ஊர் திருவிழாவிற்காக வந்த மாணவி, மாதவனனின் வீட்டிற்கு அடிக்கடி தண்ணீர் பிடிக்க சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவியிடம் பேசி வந்த மாதவன், சம்பவத்தன்று அந்த மாணவியை சந்தித்த மாதவன், அவரிடம் ஏதோ கூறி ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மாதவனின் சகோதரர் மதுவும் வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்தனர்.

இந்த விவரம் வெளியே தெரிந்தால், ஆபத்து என்று கருதிய அவர்கள் 2 பேரும் அந்த மாணவியின் கழுத்தை நெரித்தும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு மாணவி உடலை குன்று பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதனிடையே இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். மாதவனும், மதுவும் இரட்டை சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை சகோதரர்கள் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #MURDER #RAPE #MADURAI #POLICE #TWIN BROTHERS #PLUS ONE STUDENT