சசிகலா உட்பட 2 ஆயிரம் பேர் உள்ள பெங்களூர் சிறையில் ரெய்டு.. சிக்கிய 'கத்தி, சிம்கார்டு, செல்போன்'கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 09, 2019 05:35 PM

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று அதிகாலை பரபரப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

raid in Bengaluru jail where Sasikala is being detained

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் தண்டனைக்காலத்தை அனுபவித்து வரும் சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் உள்ளிட்டோர் இருக்கும் அறைகள் உட்பட, இங்கு இருக்கும் 2 ஆயிரம் கைதிகளின் அறையிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றுள் போதைமருந்து பொட்டலங்கள், 37 கத்திகள், நூற்றுக்கணக்கான செல்போன்கள், சிம் கார்டுகள், கட்டில், தலையணை, டிவி, போதை மருந்தினை புகைக்கும் குழாய்கள், மது பாட்டில்கள் என பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சசிகலா தரப்பினர் சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்காக சிறைத்துறை மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்த புகார் மனு விசாரணையில் உள்ள நிலையில், தற்போது சிறை முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இப்படியான பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #JAIL #BENGALURU #POLICE