'குடும்பத்தினர்' கண்முன்னே.. இளைஞர்களால்.. அக்கா-தங்கைக்கு 'நேர்ந்த' கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 10, 2019 01:17 PM

குடும்பத்தினர் கண்முன்னே அக்கா-தங்கையை இளைஞர்கள் சிலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

Woman, minor sister gang-raped at gunpoint in Bihar

பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் ஹுசைனாபாத் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அருகில் நடந்த கண்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடந்து சென்றுள்ளனர். அப்போது சிலோன் என்ற ஆற்றின் அருகே இளைஞர்கள் சிலர் அவர்களை வழிமறித்து அந்த குடும்பத்தை சேர்ந்த அக்கா-தங்கை இருவரையும் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதில் எதிர்ப்பு தெரிவித்து போராடிய அக்காவை துப்பாக்கியை சுட்டுவிட்டு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தற்போது சகோதரிகள் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.