பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி..! சிசிடிவியில் சிக்கிய திருடன்..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 13, 2019 03:02 PM

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பணம் மற்றும் செல்போன் போன்ற பொருள்களை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi police arrest one accused of robbing PM Modi\'s niece

பிரதமர் மோடியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோடி. இவர் நேற்று காலை அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அவர் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் புதுடெல்லியின் வடக்கே சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரது பர்சை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமயந்தி பென் மோடி உடனே திருடன் என கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பியுள்ளனர்.

இதனை அடுத்து வழிப்பறி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது பர்சில் ரூ.56 ஆயிரம் பணமும், 2 செல்போன்களும், சில ஆவணங்களும் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் வழிப்பறி சம்பவத்தில் இருந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக நோனு என்பவரை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி நடைபெற்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #NARENDRAMODI #POLICE #CCTV #NIECE #SNATCHING #PM #ARRESTED #DELHI