'கடைய மூடிட்டு.. அதிக விலைக்கு விற்பனையா?'.. 'நள்ளிரவில் டாஸ்மாக் கஸ்டமர்களுக்கு நேர்ந்த கதி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 15, 2019 10:04 AM
சென்னையில் பள்ளிக்கரணை அருகே டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவில், பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் இரவு 10 மணிக்கு மேல் கடை பூட்டிய பின்பு தினந்தோறும் அங்குள்ள பாரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதேபோல் நேற்றும் வழக்கம்போல டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாகவும், மதுபாட்டிலின் விலை தொடர்பாக வாடிக்கையாளர் இருவருக்கும் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாய்த்தகராறு முற்றிப் போனதும், பார் ஊழியர்கள் பீர் பாட்டிலால் கஸ்டமர்களை தாக்கி கொலை செய்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியதன் பேரில், அங்கு விரைந்த பள்ளிக்கரணை போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் ஸ்டீபன் மற்றும் ஆனந்த் என்றும், இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் உறுதியாகியுள்ள நிலையில், இந்த இரட்டைக்கொலை விவகாரத்தில் பார் ஊழியர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.