மனைவியை 'அடித்த' கணவர்.. ஐந்து மாத 'குழந்தை' பரிதாப பலி.. கணவர் தலைமறைவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 10, 2019 12:11 PM

கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் ஐந்து மாத குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

5 month old baby accidentally died in East Delhi, Police

டெல்லி கொண்டிலி பகுதியை சேர்ந்தவர் சத்யஜித்(32) அவரின் மனைவி  தீப்தி(29) இருவருக்கும் ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சத்யஜித் மனைவி தீப்தியை கம்பால் அடித்துள்ளார்.

அப்போது கைதவறி கம்பு அவர்களது ஐந்து மாத குழந்தையின் தலையில் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் குழந்தைக்கு முதலுதவி செய்துள்ளனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை குழந்தை வாந்தி எடுத்துள்ளது. இதனால் பயந்து போன தீப்தி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தலையில் அடிபட்டதால் குழந்தையின் மூளையில் ரத்தம் கட்டி குழந்தை இறந்து விட்டதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குழந்தையின் தந்தை மீது செக்சன் 304-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சத்யஜித்தை காசிப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.