‘ஒரு கிலோ மீட்டர் தொலைவில்’.. ‘அடுத்தடுத்து கிடைத்த 4 சடலங்கள்’.. ‘போலீஸாரை அதிரவைத்த சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 16, 2019 04:03 PM
ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஹிந்துபுரம் ரயில் நிலைய தண்டவாளத்தில் 4 சடலங்கள் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாருக்கு முதலில் ஒரு ஆண் சடலம் கிடைத்துள்ளது. பின்னர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெண் சடலம், அதற்கு சற்று தொலைவில் ஒரு ஆண் சடலமும், ஒரு பெண் சடலமும் கிடைத்துள்ளது.
தண்டவாளத்தில் அடுத்தடுத்து கிடைத்த சடலங்களால் அதிர்ந்துபோன போலீஸார் அவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்துள்ள 4 பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 55 - 65 வயது மதிக்கத்தக்க நபர்கள் எனவும், அவர்கள் குறித்து வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
