#VIDEO: ‘அடேய் விடுங்கடா... ஒத்த வாழைப்பழத்துக்காக மொத்த குரங்குகளும்’..‘முண்டி அடித்துக்கொள்ளும்’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்தாய்லாந்தில் ஒரே நேரத்தில் ஒற்றை வாழைப்பழத்துக்காக நடுரோட்டில் சண்டையில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மத்திய தாய்லாந்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஏராளாமன குரங்குகள் வசித்து வருகின்றன. குரங்குகளுக்கும் வாழைப்பழத்துக்குமான தொடர்பை உலகமே அறியும். ஆனால் ஒரே ஒரு வாழைப்பழத்தை எப்படி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் பகிர்ந்து உண்ண முடியும் என்கிற கேள்வி உள்ளது. எனவேதான், ஏதேனும் ஒரு குரங்கு மட்டுமே அந்த வாழைப்பழத்தை கைப்பற்ற வேண்டும் என்பது நியதியாகியுள்ளது.
ஆனால் அந்த ஒரு குரங்கு தாமாகத்தான் இருக்க வேண்டும் என்று எல்லா குரங்குகளும் நினைத்துள்ளதுதான் இந்த சுவாரஸ்யமான சம்பவத்துக்குக் காரணம். உணவுக்காக அவ்வப்போது மோதிக்கொள்ளும் இந்த குரங்குகள் ஒரே ஒரு வாழைப்பழத்துக்காக சாலையில் இறங்கி மோதிக்கொண்டுள்ளன. இதனால் மொத்த குரங்குக் கூட்டமும் சாலையில் ஓட, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த ஒற்றை வாழைப்பழத்தை பிடித்துக்கொண்டே குரங்குகள் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு ஓடியுள்ளன. இந்த காட்சிகள் இணையத்தில் வலம் வருகின்றன.
