‘துணிக்கடையில்’... ‘ஜீன்ஸ் டிரெஸ்ஸை'... 'நூதனமாக திருடிய இளம்பெண்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 23, 2019 11:23 PM

வித்தியாசமான  முறையில் 8 ஜீன்ஸ் பேண்ட் - ஐ , அணிந்து இளம் பெண் ஒருவர் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman stealing 8 pairs of jeans by wearing them all at once

வெனிசூலாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடைக்கு துணி வாங்க சென்றுள்ளார். அப்போது ஜீன்ஸ் பேண்ட், வாங்குவதை போல்  ட்ரெயல் பார்ப்பதற்காக எடுத்துச் சென்ற, ஜீன்ஸ் பேண்ட் -ஐ ஒன்றின் மீது ஒன்றாக அணிந்துள்ளார். பின்பு துணி எடுத்து முடித்து விட்டதை போன்று கடையை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். இதனை கண்காணித்த கடையின் பாதுகாவலர் அந்த பெண் நடந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணை குளியலைரைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, ஒரே நேரத்தில் 8 ஜீன்ஸ் பேண்ட்- ஐ ஒன்றின் மீது ஒன்றாக அணிந்து  நூதனமுறையில் திருட முயன்றது தெரியவந்தது. தற்போது வெனிசூலாவில், அரசியல் சூழ்நிலை சரியில்லாததால், இதுபோன்ற குற்றங்கள் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #JEANS #PANT #WOMAN