‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 23, 2019 09:22 PM

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newly Married Couple Kills Self Over Money Issue in Andhra

ஆந்திர மாநிலம் காஜுவாகா பகுதியைச் சேர்ந்த நரேந்திர குமார் (22) மற்றும் டில்லீஸ்வரி (21) இருவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் பெற்றோரை மீறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்ததும், பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #COUPLE #SUICIDE #LOVE #MARRIAGE #MONEY #ANDHRA