WATCH VIDEO: 'அப்பா, அம்மாவை விட்டு'... 'பிரிய மனமில்லாத புதுப்பெண்'... 'குண்டு கட்டாக புது மாப்பிள்ளை செய்த காரியம்'... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்திருமணமான பெண் ஒருவர் தனது பிறந்த வீட்டை விட்டு பிரிய மனமில்லாமல் அடம்பிடித்ததால், மாப்பிள்ள்ளை செய்த காரியம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் திருமணம் நடத்தும் முறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் நிகழ்வு என்பது மிகவும் சோகமானது என்பது, பெண் வீட்டாருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக வளர்த்த மகள் வேறொரு வீட்டில் சென்று வாழ்வது என்பது சந்தோஷம் கலந்த துன்பம் என்பது பெற்றோரே அறிவர். மகளும் அதுவரை தனது வீட்டில் செல்லமாக வளர்ந்துவிட்டு கணவர் வீட்டில் சென்று வாழ்வது வேரோடு செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போன்றது.
எனினும் நாளடைவில் இந்த சம்பவங்கள் மாறி சந்தோஷம் மட்டுமே நிலைக்கும். இப்படியாக, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாக பரவிவருகிறது. திருமணம் முடிந்து கையோடு பிறந்த வீட்டாரை விட்டு புறப்பட வேண்டிய புது மணப்பெண், சோகம் தாங்காமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். அழுகையை விடாமல் அங்கிருந்து நகராமல் இருக்க, பொறுத்து பார்த்த மணமகன், கொஞ்சம் கூட யோசிக்கமால் தனது புது மனைவியை அப்படியே அலேக்காக தனது கைகளால் தூக்கிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
