'தோழியின் தந்தை இறந்த வழக்கில்’... 'இளம்பெண் கொடுத்த வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 24, 2019 07:15 PM

தவறான நட்பால் தோழியின் தந்தையை கொலை செய்த இளம் பெண் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 year old woman arrested for killed her friend\'s father

சென்னை திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் (59) என்பவரை, அவரது மகளின் தோழியான 22 வயது இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளம்பெண் கொடுத்த வாக்குமூலம் உறைய வைத்துள்ளது. திருவொற்றியூர், சாத்துமா நகரில் வசித்து வந்த அந்த இளம் பெண் கொடுத்த வாக்குமூலத்தில், `என் அப்பா மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். நான் பி.காம் படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தேன். என்னுடைய தோழியின் அப்பாதான் அம்மன் சேகர்.

தோழியைச் சந்திக்க அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அப்போது  தோழியின் அப்பா என்பதால் அங்கிள் என்ற உரிமையோடு அவருடன் பழகினேன். அவரும் அன்பாக பழகுவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோழியைச் சந்திக்க சேகர் அங்கிள் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அங்கிள் மட்டும் தான் வீட்டில் இருந்தார். இதனால், நான் அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப நினைத்தேன். அப்போது, உன் ஃப்ரெண்டு இல்லைனா என்கிட்ட பேசமாட்டியா என்று பாசமாகக் கேட்டார். இதனால், அவரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அதன்பிறகு, ஃபோனில் பேசத் தொடங்கிய சேகர் அங்கிளிடம், நானும் பேசி வந்தேன். நான் கேட்கும் பொருள்களை எல்லாம் சேகர் அங்கிள் வாங்கித் தருவார். இதனால் அவர் மீது எனக்கு மரியாதை அதிகரித்தது.  ஆனால் நாளக்கு நாள் சேகர் அங்கிளின் பேச்சு, நடவடிக்கைகள் மாறத் தொடங்கியது. இதனை முதலில் நான் தவறாக எண்ணவில்லை. ஒரு கட்டத்தில் அவர் சொல்வதை கேட்கத் தொடங்கிய நான், சில காரணங்களுக்காக அவர் சொல்வதை தட்ட முடியவில்லை.

இதற்கிடையில், முதலில் எங்கள் நட்பை தவறாக எடுத்துக்கொள்ளாத எங்கள் இருவரின் குடும்பம், பின்னர் கண்டிக்க ஆரம்பித்தனர். ஆனால் நாங்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 4 ஆண்டுகளுக்கும் மேல் பழக்கத்தை தொடர்ந்து வந்தோம். இந்நிலையில், மற்ற ஆண்களுடன் நான் பேசினால், சேகர் அங்கிள் கண்டித்ததுடன், எனது சுதந்திரத்தில் தலையிட ஆரம்பித்ததால், சண்டை வர ஆரம்பித்தது. அப்போதுதான், எனக்கு  திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்ததும், சேகர் அங்கிள் நானே உன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான், இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை கூறி மறுப்பு தெரிவித்தேன். இதனால் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டவும், அன்பாக பேசி வரவழைத்து, பிறந்த நாள் கிஃப்ட் கொடுக்கப் போறேன்னு கண்ணை மூடச் சொல்லி, அவர் முகத்தில் ஃபெவி குவிக் பசையை தடவி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். முதலிலேயே வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தார்கள். நான் கேட்கல, அதனால் இப்போது கஷ்டப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கண்ண க்ளோஸ் பண்ணுங்க... சர்ப்ரைஸ் தர்றேன்... மகளின் ‘தோழி’யால்... ‘தந்தை’க்கு நடந்த கொடூரம்... ‘சென்னை’யில் உறைய வைக்கும் சம்பவம்!

Tags : #MURDERED #CHENNAI #WOMAN #YOUNG