‘எனக்கு நல்ல அப்பா வேணும்’... 7 வயது ‘சிறுவனின்’ பையில் இருந்து... தாய் கண்டெடுத்த ‘கடிதம்’... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 22, 2019 12:06 AM

டெக்சாஸில் 7 வயது சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Viral Christmas Letter 7 Year Old Boy Asks Santa For Good Dad

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பாதுகாப்பு முகாம் ஒன்றில் வசித்து வரும் பிளேக் என்ற 7 வயது சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “அன்புள்ள சாண்டா, நாங்கள் எங்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டி இருந்தது. என்னுடைய அப்பா மோசமானவர். நாங்களே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. அப்பாவுக்கு வேண்டியது எல்லாமே அவருக்கு கிடைத்தது. அப்போது அம்மா, ‘இது நாம் வெளியே போக வேண்டிய நேரம். நாம் பயப்படத் தேவையில்லாத பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்’ எனக் கூறினார்.

எனக்கு பதற்றமாக இருக்கிறது. நான் மற்ற குழந்தைகளிடம் பேச விரும்பவில்லை. நீங்கள் இந்த கிறிஸ்துமஸிற்கு வருவீர்களா? எங்களிடம் எதுவுமே இல்லை. எனக்கு டிக்‌ஷனரி, காம்பஸ் மற்றும் வாட்ச் ஆகியவற்றைக் கொண்டு வர முடியுமா? எனக்கு அத்துடன் ரொம்ப நல்ல அப்பாவும் வேண்டும். அதையும் உங்களால் தர முடியுமா? - அன்புடன் பிளேக்” என எழுதியுள்ளார். பிளேக்கின் அம்மா அந்தக் கடிதத்தை அவருடைய பையில் இருந்து கண்டுபிடித்து எடுக்க, அந்த பாதுகாப்பு முகாமினர் அதை தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தைப் படித்து நெகிழ்ந்த பலரும், “நாங்கள் பிளேக்கிற்கு உதவி செய்ய விரும்புகிறோம். அத்துடன் அந்த முகாமில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உதவி செய்ய விரும்புகிறோம். இந்த கிறிஸ்துமஸ் பிளேக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும்” என அதில் கமெண்ட் செய்துள்ளனர். பிளேக்கின் அந்தக் கடிதம் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அந்த பாதுகாப்பு முகாமிலுள்ள குழந்தைகளுக்கு பரிசுகளை அனுப்பியுள்ளனர். அதையும் அந்த பாதுகாப்பு முகாமினர் புகைப்படத்துடன் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Tags : #US #BOY #CHRISTMAS #SANTA #LETTER #FATHER #MOTHER #VIRAL