‘என்னோடது நான் என்ன வேணா பண்ணுவேன்’... அதுக்குன்னு ‘இப்படியா!’... நொடியில் ‘நொறுங்கிய’ 2 கோடி கார்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 24, 2019 09:12 AM

ரஷ்யாவில் ஒருவர் தன் மெர்சிடிஸ் எஸ்.யூ.வி காரை ஹெலிகாப்டர் வைத்து தூக்கிக் கீழே போட்டு நொறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video Russian Man Drops Mercedes Benz Car From A Helicopter

ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் இகோர் மொராஸ். இவர் ஆசையாக தான் வாங்கிய மெர்சிடிஸ் காரை ஓட்டும்போது தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் எரிச்சலடைந்துள்ளார். அதனால் அந்தக் காரை நொறுக்க முடிவு செய்த அவர், காரை ஹெலிகாப்டரில் கட்டித் தூக்கி 1000 அடி உயரத்திலிருந்து கீழே போட்டு நொறுக்கியுள்ளார்.

மேலும் அதை அவர் வீடியோவாகவும் எடுத்து யூடியூபில் பதிவிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் உள்ளூர் செய்திகளில், இகோர் மொராஸ் தனது நண்பர் ஒருவருடன் போட்ட ஒப்பந்தத்திற்காகவே இதை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MERCEDESBENZ #CAR #HELICOPTER #VIRAL #VIDEO